சந்திரபாபு நாயுடுக்கு விமான நிலையத்தில் மரியாதை குறைவு

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு விமான நிலையத்தில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமானம் நிலையத்தில் உள்ள போது பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டார்.

 

மேலும் அவருக்கான இஜட் பிளஸ் பாதுகாப்பு காண்பாயையும் அனுமதிக்கவில்லை என்றும், சக பயணிகளுடன் பேருந்தில் ஏற்றப்பட்டு விமானத்தில் ஏற வைத்ததாகவும் தெலுங்கு தேசம் கட்சியினர் கூறினர். ஏற்கனவே சந்திர பாபு நாயுடுவை கொலை செய்ய நக்சலைட்டுகள் முயற்சிசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர் பாதுகாப்பில் சமரசம் செய்வதை ஏற்கமுடியாது என்று தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.


Leave a Reply