பிறந்து ஒரே நாளான பச்சிளங் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை மாவட்டம் மண்ணூரில் சாலைக்கு அருகே புதரில் விட்டு செல்லப்பட்ட ஒரே நாளான பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அன்னூர் கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே புதரில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று கிடப்பதாக புகார் வந்தது.

 

அங்கு விரைந்து சென்ற 108 மருத்துவ குழுவினர் ஒரே நாளான பெண் குழந்தையை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து அரசு மருத்துவமணக்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட பெண் குழந்தையை நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்குழந்தையை விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Leave a Reply