நடிகர் சங்க தேர்தல் 2019 !பலப்பரீட்சை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. நடிகர் சங்கத்துக்கு வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு முன் களம்கண்டுள்ள பாண்டவர் அணியினருக்கும், சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கும், உறுப்பினர்களிடம் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

 

போட்டி போட்டு ஆதரவு திரட்டி வரும் அவர்கள் நடிகர்களையும், நாடக நடிகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் மற்றும் பாக்கியராஜ் போட்டி போடுகிறார்கள்.

 

பொதுசெயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் மற்றும் கணேஷ் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு கருணாஸ், குட்டி பத்மினி, பூச்சி முருகன் உள்ளிட்ட 4 பேர் களம் காண்கிறார்கள். பொருளாளர் பதவிக்கு மீண்டும் கார்த்தியும், அவரை எதிர்த்து நடிகர் பிரசாந்தும் களம் காண்கிறார்கள்.


Leave a Reply