சிறுமியை மது குடிக்க வைத்து வீடியோ எடுத்த கொடூரம்

பள்ளி செல்லும் சிறுமி மது குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுமியை மது குடிக்க வைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி மது குடிக்கும் காட்சிகள் இணையத்தில் இடம் பெற்றுள்ளன. சிறுமியே மதுவை டம்ளரில் ஊற்றி தண்ணீரையும் கலந்து குடிக்கிறார். சிறுமி மது குடிப்பதை சிலர் வீடியோ எடுத்து ரசித்துள்ளனர்.

 

சிறுமியின் அருகில் மற்றொருவரும் அமர்ந்து கறி சாப்பிட்டபடியே மது குடித்து இருப்பதால் சிறுமியை குடிக்க வைத்தவர்கள் அவர்களது உறவினர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சிறுமியை மது குடிக்க வைத்திருப்பது மிக மோசமான முன்உதாரணம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுமியை மது குடிக்க வைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply