உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட 810 கிராம் தங்கம்

Publish by: --- Photo :


திருச்சி விமான நிலையத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்தவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

 

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அப்துல் ரஹீம், முஹம்து இபதுல்லா ஆகிய இருவர் தங்கள்உடலில் 810 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 28 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply