சட்ட விரோத நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பின் போது விபத்து

விருது நகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே விலங்குகளை வேட்டையாட சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கோட்டையூரை சேர்ந்த அழகர் சாமி மற்றும் மாகாளி ஆகிய இருவர் அங்குள்ள வயல் வெளியில் அமர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சில வெடிகுண்டுகள் வெடித்து இருவரும் காயமடைந்தனர். வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் இருவரும் தப்பி ஓடி வந்துள்ளனர். வெடி குண்டுகளை கைப்பற்றி இருவரையும் தேடி வந்த போலீசாரிடம் அழகர் சாமி மட்டும் காயங்களுடன் சிக்கினார். அவரை கைது செய்து அரசு மருத்துவமனையில் செய்த போலீசார் மாகாளியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Leave a Reply