ஆங்கிலம் , இந்தி மொழிகளில் உரையாட உத்தரவுக்கு திமுக ஆர்ப்பாட்டம்

Publish by: --- Photo :


சென்ட்ரல் நிலையத்தில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தி திணிப்பிற்கு எதிராக தன்னுடைய வாதங்களை வைத்தது மட்டுமில்லாமல் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் திமுக சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் முன்பாக சுமார் 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நேற்று தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் அதிகாரிகள் தங்களுக்கு உட்பட்ட மொழியாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மட்டும் பேச வேண்டும் எனவும் தமிழில் பேச கூடாது என்றும் சுற்றறிக்கை வெளியிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை புகுத்தும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் , 100 க்கும்மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதுமட்டுமில்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் , சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து முறையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களும் முறையிடுவதற்காக சென்றுள்ளனர்.


Leave a Reply