திருமணம் செய்த 5 நாளில் இளைஞர் கொலை!

தஞ்சை அருகே இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயம்பேட்டை மணலூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இவர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.

 

திருமணம் முடிந்த 5 நாட்களில் அவர் நடுக்காவிரி பனைவழி கிராமத்தில் ஆற்றங்கரையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். காதல் திருமணம் செய்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டரா? பிரசாந்த் கொலையில் சந்தியாவின் குடும்பதிற்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply