தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும், இன்னும் 15 நாட்களில் மோசமான நிலையை எட்டக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், தெரிவித்தார்.

 

மேலும் நீர்நிலைகளை தூர்வாராமல் இருந்ததே தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என கூறிய அவர் இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.


Leave a Reply