கரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும் ,அரவக்குறிச்சி சட்ட மன்ற இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பொங்கம்பாடி பிரிவு, பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த மு.க. ஸ்டாலின் அவர்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார். பள்ளபட்டியில் திருமண உதவித்தொகை ,தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.