மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது.

 

இந்நிலையில் நேற்று மாலை தேக்கம்பட்டி, சமயபுரம் பகுதிகளில் நீண்ட தந்தங்களுடன் கூடிய ஒற்றை யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நடந்து சென்றது.யாரையும் அச்சுறுத்தாமல் அமைதியாக சாலையை கடந்து வனப்பகுதிகளுக்குள் சென்றாலும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயினர்.வனவிலங்குகளின் நடமாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.


Leave a Reply