போரூரில் மின் சாதனங்களை பரிசோதிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை போரூரில் மின்சாதனங்களை பரிசோதனை செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் போரூர் பகுதியில் மின்சாதனங்களை தர பரிசோதனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு 15 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.


Leave a Reply