சென்னையில் கைலாஷ் சாலையில் திடீர் பள்ளம்

Publish by: --- Photo :


சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் நேற்று இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.  கைலாஷ் சாலை மிக முக்கியமான ஒரு பிரதான சாலையாக இருக்கிறது. இன்று அதிகாலையில் இந்த இடத்தில் 6 அடி பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இதனை சுற்றியும் பேரிகார்ட் போடப்பட்டுள்ளது.  இந்த பள்ளத்திற்கான முக்கிய காரணம் இது வரை தெரியவில்லை.

 

ஆனால் இந்த பள்ளத்திலிருந்து 20 அடி தூரத்தில் நேற்று ட்ரைநேஜ் பைப்ஐ சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. அதன் அதிர்வலையில் தான் தற்போது இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம்.  இந்த பள்ளத்தினால் அதன் அடியிலிருந்த பைப்களில் உடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம்வீசுகிறது.

 

ஐ‌டி ஊழியர்கள், பல வகை துறை சார்ந்த வேலைக்கு செல்வோர் தினமும் இவ்வழியை கடந்து தான் செல்வர். இந்த பள்ளம் ஏற்பட்டிருப்பதான் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த பள்ளத்தை சரி செய்வதற்க்கு நெடுஞ்சாலை துறையோ அல்லது பொதுப்பணிதுறையோ யவரும் முன்வரவில்லை.


Leave a Reply