கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று காலை கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய, சீன அதிபர்களை மோடி சந்தித்து பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்சேக் நகரில் தொடங்குகிறது.

 

இந்த மாநாட்டில் பங்குபெறுவதற்காக பிரதமர்மோடி இன்று காலை டெல்லியிலிருந்து  புறப்பட்டுசென்றார். மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் ஆகியோரை சந்தித்து பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

 

மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் மோடி பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.மோடியின் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அந்த நாடு அனுமதித்தபோதும் ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி கிர்கிஸ்தான் செல்கிறார்.


Leave a Reply