உ.பி. யில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரின் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்டன

தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டபோது ரயிலில் உயிரிழந்த இருவரின் உடல்கள் கோவை கொண்டுவரப்பட்டுள்ளன.கோவையிலிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்டோர் உத்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

 

ஆக்ராவிலிருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு திரும்ப பயணித்தவர்களுக்கு ஜான்சிஅருகே வெப்பத்தின் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை மீட்ட ரயில்வே காவல் துறையினர் ஜான்சி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

 

அதனை தொடர்ந்து இன்று காலை உயிரிழந்த தெய்வானை ஆகியோரின் உடல்கள் கோவைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே உடற்கூராய்வில் இறப்புக்கான காரணம் என்ன என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை.


Leave a Reply