மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மேற்கு வாங்கத்தை சேர்ந்த 30 வயதான பெண் விபத்தில் கால் மூட்டில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சைக்காக கடந்த 4 ஆம் தேதி முதல் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

 

அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் மயக்க ஊசி போடப்பட்டு காலில் எக்ஸ் ரே எடுக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது லாப் டெக்னீசியன் பாபு மயக்கத்தில் இருந்த போது தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மயக்கம் தெளிந்த பின் மருத்துவர்களிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்ததோடு சென்னை காவல் துறையிடம் மின்னஞ்சல் மூலமும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

 

இதனையடுத்து, துரைபாக்கம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது அந்த பெண்ணுக்கு மன நலம் சரி இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் நோயாளிகளின் குறிப்பின் மூலம் அந்த பெண் அறுவை சிகிச்சைகாக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

அப்போது அப்பெண் தனக்கு நேர்ந்தது குறித்து கூறியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் லாப் டெக்னீசியனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply