கோவை புதூர் அருகே கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிகாட்சி மூலம் திறந்து வைத்தார். சுமார் 10 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 137 குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன.
நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.பி. வேலுமணி அதிமுக வில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.