திருமணம் ஆன கையோடு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜோடி!

Publish by: --- Photo :


சேலம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி திருமணம் செய்த கையோடு புதுமண தம்பதியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லும்படி காவல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் சேலத்தை சேர்ந்த புதுமண தம்பதிக்கு கீர்த்திராஜ், மற்றும் தனஷ்ரேயா ஆகியோர் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக திருமணம் முடிந்த கையோடு நெத்திமெட்டில் உள்ள திருமண மண்டபத்திலிருந்து சீலநாயக்கன்பட்டி வீடு நோக்கி இருவரும் தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுமணத்தம்பதியின் இந்த முயர்ச்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.