காஞ்சிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பழமையான அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது.

 

இந்த கட்டிடத்தின் 14 வது மாடியில் 32 வயது மதிக்கதக்க ஆண் எலும்புக்கூடு கண்டு எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கு முன் இறந்து இருக்கலாம் என செங்கல்பட்டு தாலுகா போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.


Leave a Reply