பெரியகுளத்தில் போராட்டத்தை செல் போனில் படம் பிடித்த இளைஞர்கள் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே லட்சுமி புரத்தில் சாலை மறியல் போராட்டத்தை செல் போனில் படம் பிடித்த 3 பேரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சுமி புரம் பகுதியில் இரு வேறு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு பிரிவினரை கண்டித்து மற்றொரு பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது போராட்டத்தை தங்களது செல் ஃபோன் மூலம் 3 இளைஞர்கள் படம் பிடித்தனர். இதனை கண்ட ஒரு பிரிவினர் அந்த 3 பேரும் போராட்டம் நடக்க காரணமாக இருந்த மற்றொரு பிரிவினரின் உறவினர்கள் என சந்தேகித்து அவர்களை சரமாரியாக தாக்கினர்.

 

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 3 கல்லூரி மாணவர்களையும், அங்கிருந்து பத்திரமாக அழைத்து செல்ல முயன்றனர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.


Leave a Reply