சேலம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி

சேலம், தாதகாபட்டி,பொம்மன்ன செட்டிக்காடு, க.எண். 539 என்ற முகவரியில் வசித்து வரும் டி. ஜானகி ராமன்(26),த/பெ.திருமலை தாஸ் என்பவர், சேலம் அன்னதானப்பட்டி பாரதி மருத்துவமனை தெரு, என்ற விலாசத்தில் வசித்து வரும் , விஷ்ணு பிரியா என்பவர் கோவையை சார்ந்த மார்கோசிஸ் நவமணி என்பவர் ஹாங்காங்கில் தற்போது 10 நபர்களுக்கு வேலை தயாராக உள்ளதாக விஷ்ணு பிரியா என்பவர் மூலம் தெரிய வந்தது.

 

அதனை தொடர்ந்து மார்க்கோசிஸ் நவமணி என்பவரை தொடர்பு கொண்ட போது அவரை கோவையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வரக்கூறியும், அவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள NEXZ print service அலுவலகத்தில் வைத்து இருவருக்குள் ஏற்பட்ட பேச்சு வார்த்தையின்பால் ரூ.2 இலட்சமும், மற்றும் அசல் பாஸ்போர்ட் கொடுத்தால் ஒரு வார காலக்கட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

 

மேற்படி மார்கோஸிஸ் நவமணி என்பவருக்கு பெங்களூர்,ஒசூர் மற்றும் ஊட்டியில் கிளை அலுவலகங்கள் இருப்பதாகவும் அவரிடம் சுமார் 100 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்தும்,தன்னிடம் தங்களது பாஸ்போட்டை கொடுத்தால் ஒன்றாக இணைத்து அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரான டி.ஜானகிராமன் என்பவர் தனது அசல் பாஸ்போர்ட் மற்றும் ரொக்கமாக ரூ.1,90,000/- பல்வேறு தவணைகளில் கொடுத்ததாகவும், இதன் தொடர்ச்சியாக மார்கோஸிஸ் நவமணி என்பவர் எவ்வித முயற்சி மேற்கொள்ளமல் தன்னைஏமாற்றுவதாக யூகம் செய்து கொண்டு பலமுறை அவரிடம் பணத்தையும் மற்றும் பாஸ்போர்ட்டை திருப்பி தர கூறியுள்ளார்.

 

எவ்வித பதிலும் தெரிவிக்காமல் ,தகவல் எதும் இல்லாமலும், இருந்த நிலையில் மேலும் ஜானகி ராமன் தன்னுடன் பயின்ற மற்ற நபர்களுடன் சேர்ந்து மார்கோஸிஸ் நவமணி அணுகியபோது இவர் 5 நபர்களிடம் அசல் பாஸ்போர்ட் மற்றும் ரூ.4,60,000/- த்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கிதருவதாக பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேற்படி ஜானகி ராமன் அளித்த புகாரின் பேரில் கடந்த 19.01.2019 ஆம் தேதி மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்த நிலையில் எதிரி ஆன மார்கோஸிஸ் நவமணி என்பவர் தலைமறைவாக காணப்பட்டார். இன்று 13.06.2019 ஆம் தேதி மேற்படி எதிரியை கைது செய்யப்பட்டது.


Leave a Reply