நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு

Publish by: --- Photo :


நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் 23 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்தின் உறுப்பினரான ஏழுமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

 

அதில் பதவிக்காலம் முடிந்த செயற்குழு, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக அறிவித்திருப்பது சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இருந்தார். எனவே நடிகர் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

 

மேலும் வாக்காளர் பட்டியலை முறையாக தயாரிக்கவும், நியாயமாக தேர்தலை நடத்தவும் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார் இம்மனு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது ஆஜரான நடிகர் சங்க தரப்பு வழக்கறிஞர் தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டதாக கூறினார். சங்க தேர்தலில் போட்டியிட 3171 உறுப்பினர்கள் தகுதி பெற்று இருப்பதாக தெரிவித்தும், வாக்காளர் பட்டியலையும் தாக்கல் செய்த அவர் நடப்பாண்டில் 52 உறுப்பினர்கள் மரணமடைந்து இருப்பதாக கூறினர்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்த நீதிபதி மரணமடைந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வரும் 19 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.


Leave a Reply