தனது 5 குழந்தைகளை கொன்ற பின்னும் கணவனை விடுவிக்குமாறு கோரும் தாய்

தன் 5 குழந்தைகளை கொன்ற போதும் கணவரை விடுவிக்குமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் மனைவி கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்காவின் இருந்த தம்பதி, கணவரின் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்று வேறு ஒருவரை மணந்து கொண்டார்.

 

இந்நிலையில் குழந்தைகள் 5 பேரையும் அவர்களது தந்தையும், முன்னாள் கணவருமான ஜூனியர் கொலை செய்தார். 2004 இல் நடந்த கொலை சம்பவத்தின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தனது முன்னாள் கணவரை கொலை முகத்தை கிழித்து வறுத்தெடுக்க வேண்டும் என மனைவி தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி வந்தார்.

கடந்த செவ்வாய் அன்று நடந்த விசாரணையில் குழந்தைகளின் ஆடையை தற்போதும் துவைக்காமல் முகர்ந்து பார்த்து ஏங்குவதாகவும், தன் குழந்தைகள் அவரது தந்தையை மிகவும் விரும்பியதால் அவரை விடுவிக்குமாறு கோரினார். ஒரு தாயாக தானே தன் கணவனை கொல்ல நினைத்தாலும் உயிரிழந்த குழந்தைகளின் சார்பில் கோரிக்கையை வைப்பதாக கூறினர்.


Leave a Reply