நிபா வைரஸ் காரணம்- பழந்தின்னி வௌவால்! அதிர்ச்சி தகவல்

கேரளாவில் நிபா வைரஸ் பரவ காரணமாக கூறப்படும் பழந்தின்னி வௌவால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் 8 பேர் கொண்ட வைராலஜி ஆய்வாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவிய நிலையில் சற்று கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

 

நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பழந்தின்னி வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படுவதால் அவற்றின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் வைராலஜி ஆய்வாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் அங்குள்ள வடக்கு பகுதியில் பழந்தின்னி வௌவால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. கேரள அரசின் வைராலஜி ஆய்வு நிறுவனம் மத்திய அரசின் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த 8 பேர் கொண்ட குழு பழந்தின்னி வௌவால்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


Leave a Reply