தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்!

ஜம்மு காஷ்மீர் சோப்பூரில் மாநிலம் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். பாரிமுல்லா மாவட்டம் சோப்பூரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வீரர்கள் தீவிரவாதிகள் தப்பி சென்று விட கூடாது என்பதற்காக அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

 

அப்போது வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடவே பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவனுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் , அவன் எந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Leave a Reply