எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வருமாறு சுவரொட்டி! பரபரப்பு

அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்கவருமாறு சுவரொட்டி விளம்பரம் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பே ஒட்டப்பட்ட சுவரொட்டியால் அங்கு மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது.

 

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடக்கும் நிலையில் அதிமுக வின் பொது செயலாளராக தற்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வருமாறு சுவரொட்டி விளம்பரம் உள்ளது. அதிமுக விற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.


Leave a Reply