மதுரையில் காவல் நிலையத்தின் அருகே இளைஞர் வெட்டி கொலை

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் குற்றவழக்கு தொடர்பாக கையொப்பம் இட வந்துள்ளார். கையொப்பம் இட்டுவிட்டு வீடு திரும்பும் போது காவல் நிலைய வாசலிலிருந்து 200 மீ தொலைவில் சென்று கொண்டிருக்கும்போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி காவல் நிலையம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது.

 

போலீசார் அங்குள்ள சி‌சி‌டி‌வி யினை ஆய்வு செய்து பாரத்த பின்னர், கொலை செய்யப்பட்ட நபரின் மீது நான்கு, ஐந்து வழக்குகள் இருப்பதாகவும், முன் விரோதம் காரணமாகவே இந்த கொலை நிகழ்த்தப்பட்டிருக்கும் என்றும் கூறினர்.

 

பட்டப்பகலில் மதுரை மாநகரில் இந்த கொலை சம்பவம் நிகழ்த்தபட்டிருப்பது மதுரை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவருடைய உறவினர் ஒருவரையும் ஓட ஓட சரமாரியாக வெட்டியுள்ளனர். அவருக்கு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply