பாஜக நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!

Publish by: --- Photo :


பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவின் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடியின் பெயர் இடம்பெறுள்ளது. அதனைதொடர்ந்து தேசிய தலைவராக அமித்ஷா, மக்களவையின் துணைத்தலைவராக ராஜ் நாத் சிங் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 

இதே போல் மாநிலங்களவை தலைவராக தாவர்சந்த் கெலாட், துணை தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் கொறடாவக பிரகலாத் ஜோஷியும், மக்களவை துணை கொறடாவக அர்ஜூன் ராம் மெக்வாலும், மாநிலங்களவை துணை கொறடாவாக முரளிதரன் செயல்படுவார் என அறிவிப்பு.

 

கட்சியின் கொறடாவாக மக்களவைக்கு சஞ்சய் ஜெஷ்வாலும், மாநிலங்களவைக்கு குபேந்தர் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவையின் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ரவி சங்கர் பிரசாத், அர்ஜூன் , நரேந்திர சிங் தோமர், ஸ்மிருத்தி ராணி, ஆகியோரின் பெயர்களும், மாநிலங்களவைக்கு ஜே.பி.நட்டா, ஓம் பிரகாஷ், நிர்மலா சீதாராமன் , தர்மேந்ர பிரதான் , பிரகாஷ் ஜௌடேக்கர் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.


Leave a Reply