தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கிறது. பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

 

துப்பாக்கியால் சுட்டும் கிரானைட் கற்களை வீசியும் நடத்திய தாக்குதலில் 5 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் பலத்த காயமடைந்து சி‌ஆர்‌பி‌எஃப் இன் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் மிக கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஸ்ரீ நகருக்கு அழைத்து செல்ல கூடிய நிலையும் உள்ளது.

 

தலைமை அதிகாரி ஒருவர் அவரும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார். ஒரு வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் மீதும் அங்கிருந்த பொதுமக்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.தற்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது.பதட்டமான நிலையும் நிலவி வருகிறது.


Leave a Reply