நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சாலை நடுவே இருந்த பேரிகார்டு மேலே விழுந்ததில் 8 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.தண்ணீர் பந்தல் காடு பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகள் காயத்ரி 8 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இவர் உடல் உபாதையை கழிப்பதற்காக தண்ணீர் பந்தல் காடு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராசிபுரத்தில் இருந்து ஆத்தூரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் தண்ணீர் பந்தல் காடு பேருந்து நிலையம்அருகாமையில் போடபட்டுள்ள பேரிகார்ட் மீது மோதியுள்ளது.
அப்போது தூக்கி வீசப்பட்ட பேரிகார்ட் நடந்து சென்றுள்ள மாணவி மீது விழுந்துள்ளது. தலையில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் , வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் பள்ளி மாணவர்களுடன் பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.