தலைமைச் செயலகத்தில் விஜய்க்கு விவசாயிகள் நேரில் நன்றி..!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக அமைக்கப்படவிருந்த பசுமை வழி விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து, பரந்தூர் நில எதிர்ப்புக் குழுவினர் மற்றும் விவசாயிகள் தலைமைச் செயலகத்தில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
விவசாய நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் இந்த முக்கிய முடிவை எடுத்ததற்காகக் கிராம மக்கள், விவசாயிகள் முதலமைச்சர் விஜய்க்குப் பச்சைத் துண்டு அணிவித்தும் நெற்கதிர்களை வழங்கி தங்களது நெகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




