அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் கட்டண உயர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 24 பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  பேராசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகள் உளிட்டவற்றை காரணம் காட்டி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி கேட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 24 பொறியியல் விண்ணப்பித்தனர்.

 

இதையடுத்து நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு 24 காலூரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை மட்டும் 40 % உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

 

கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் இல்லை எனவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் மட்டும் 85000 ரூபாய்க்கு பதில் 1,20,000 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த புதிய கட்டண உயர்வு நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply