தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் கல்வி தொகை குறைப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் கொடுக்கும் கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது.

 

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மற்றும் சமூகத்தில் பின் தங்கிய பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தொகையை தமிழக அரசாங்கம் ஏற்று ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தரும்.

 

தனியார் பள்ளிகளுக்கு இந்த சட்டத்தை அமல்படுத்துவத்தில் பலமுறை சிக்கல் ஏற்பட்டாலும் ஏழை மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமை நிராகரிப்பட்டுவிட கூடாது என்பது தான் நிதர்சனம். கல்வி தொகையாக ஒரு மாணவனுக்கு 25000 ரூபாய் வாங்கி கொண்டிருந்த தமிழக அரசு இப்பொழுது இந்த தொகையை 11000 ரூபாய் ஆக குறைத்துள்ளது.


Leave a Reply