திருப்பூரில் வட மாநில பனியன் தொழிலாளி தாக்கப்பட்டதால் போராட்டம்

Publish by: --- Photo :


திருப்பூரில் வட மாநிலத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலிபாளையம் பகுதியில் உள்ள சிட்கோவில் பணியாற்றும் வட மாநில பனியன் தொழிலாளியான லக்ஷ்மண் என்பவரை அங்குள்ள சிலர் தாக்கியுள்ளனர்.

 

இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிட்கோ நுழைவுவாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.