காரிலிருந்து மனைவியை கீழே தள்ளி கொலை முயற்சி

Publish by: --- Photo :


கோவை துடியலூர் அருகே மனைவியை கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் காரிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற போது பதிவான சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. உதைகையிலிருந்து கடந்த மாதம் 9 ஆம் தேதி மனைவி ஆர்த்தி மற்றும் தனது பெற்றோருடன் அமல் ராஜ் என்பவர் கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

 

அப்போது கணவன் மனைவியிடையே கடும் வாக்கு வாதம் நடந்து இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் துடியலூர் அருகே தனது பெற்றோர் உதவியுடன் காரிலிருந்து மனைவியை கீழே தள்ளினார். அப்போது அங்கிருந்த வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி‌சி‌டி‌வி காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.


Leave a Reply