ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் அணிவகுக்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மனிதச்சங்கிலி ஆரம்பமாகிறது.கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் முடிய உள்ளது.

 

596 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறவுள்ள மனிதச்சங்கிலி போராட்டத்தை நம்மாழ்வார் தொடங்கிய பேரழிப்புக்கு எதிரான இயக்கம் முன் நின்று நடத்துகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

நாளை பிற்பகல் 5 மணிக்கு தொடங்கும் மனித சங்கிலி போராட்டம் 6 மணிவரை நடை பெற உள்ளது. இதில் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அணிவகுக்க உள்ளனர்.


Leave a Reply