இறந்த குட்டியை ஊர்வலமாக கொண்டு சென்ற யானை! கண்கலங்க வைக்கும் வீடியோ

இறந்த குட்டி யானை ஒன்றை யானைகள் இறுதி ஊர்வலமாக கொண்டு சென்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. வனத்தின் ஒரு இடத்திலிருந்து இறந்த குட்டி யானையை யானை ஒன்று தனது தும்பிக்கையால் தூக்கி கொண்டு மறு இடத்திற்கு சென்றது.

 

அதனை பின்தொடர்ந்து யானை கூட்டமே சென்றது. இந்த நிகழ்வை கண்ட வனத்துறை அதிகாரி ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சி வீடியோவை கண்டவர்களை கண்கலங்க வைத்துள்ளது. யானையின் பாசப்போராட்டம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.


Leave a Reply