பிரபல நடிகர் கிரிஷ் கர்னாடின் உடல் நேற்று தகனம்

Publish by: --- Photo :


பெங்களூரில் காலமான பிரபல எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாடின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. எழுத்து, திரைத்துறை, நாடகத்துறை என பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர் கிரிஷ் கர்னாடின். 81 வயதான இவர் உடல் நலக்குறைவால் பெங்களூரில் நேற்று காலமானார். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் கிரிஷ் கர்னாட்டின் உடல் கள்வழி பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

கிரிஷ் விருப்பப்படி அவரின் உடல் தகனம் செய்யும் முன் மன ரீதியான சடங்குகளோ அல்லது அரசு மரியாதையோ செய்யப்படவில்லை. கிரிஷ் கர்னாடின் மறைவை ஒட்டி கர்நாடகாவில் மூன்று நாள் அரசு முறையில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கிரிஷ் கர்னாட்டின் மறைவுக்கு பிரதமர் மோடியும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் திரை உலகினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.


Leave a Reply