” குளுகுளு ” கோவை ரம்மியமான சூழ்நிலையை அனுபவித்து வரும் கோவை மக்கள்

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தற்போது தென்மேற்கு பருவ மழை ஒரு வாரம் தாமதமாக துவங்கியிருப்பதால் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அடுத்த இரு நாட்கள் கன மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அதன் தொடர்ச்சியாக மேற்குத்தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.கடந்த சில தினங்களாகவே கோவை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது இயற்கையின் அருட்கொடையால் வெயிலின் தாக்கம் குறைந்து ” குளுகுளு ” சீசன் துவங்கியுள்ளது.

 

மேலும்,மினி ஊட்டியாகவே மாறிப்போன கோவையில் இதமான காற்றுடன் லேசான சாரல் மழையும் பெய்து, ரம்மியமாக காட்சியளிப்பது கண்களை கொள்ளை கொள்ள செய்கிறது.இந்த ரம்மியமான சூழலை தற்போது கோவை மக்கள் ரசித்து அனுபவித்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, துடியலூர், சிங்காநல்லூர், சூலூர், ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட மினி ஊட்டியாகவே மாறியுள்ளது.

கோவையின் இதமான சூழலை சுற்றுலாவிற்காக ஊட்டி,கொடைக்கானல் செல்வோர் கோவைக்கு வரும் போது இங்கேயே தங்கி ரம்மியமான,இதமான சூழலை ரசித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply