டிராபிக் ராமசாமியை ” தெறிக்க ” விட்ட இந்து அமைப்புக்கள் !!!

கோவை துடியலூரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை டிராபிக் ராமசாமி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிராபிக் ராமசாமியின் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி அவரது காரை பாஜக மற்றும் இந்து முன்னணியினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கோவை மாவட்டம் துடியலூருக்கு வந்த டிராபிக் ராமசாமி துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றக் கோரி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். காவல்துறையினர் அங்கு இருந்தவர்களைக் கொண்டு பிளக்ஸ் பேனர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது,பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அகற்றி ஓரத்தில் வைத்தனர்.

அப்போது அந்த பேனரை டிராபிக் இராமசாமி கிழித்ததாக தெரிகிறது.தகவல் அறிந்த பா.ஜ.க,இந்து முண்ணனி அமைப்பினர் துடியலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டனர். இதையடுத்து அங்கிருந்த பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அங்கிருந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

 

இந்நிலையில் அங்கிருந்து புறப்பட தயாராக இருந்த காரில் ஏறிய டிராபிக் இராமசாமியை முற்றுகையிட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி காவல் துறையினரிடம் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும், சாலை மறியலிலும் ஈடுபட முற்பட்டனர். அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறி டிராபிக் ராமசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply