கழிவுநீர் கால்வாயில் குடிதண்ணீர் கலக்கிறது! வாட்டர் போர்டு அதிகாரி.AW வெங்கடாச்சலம் அலட்சியம்!

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் டு அவினாசி சாலையில் 10 வார்டு பாரதி நகர் பகுதியில் சாலை ஓரமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாயில் குடிதண்ணீர் கலக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் வாட்டர் போர்டு பிட்டர் மோகனிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மோகன் பிட்டர் குடிநீர் குழாய் உடைப்பை கண்டு இதை சரி செய்ய முடியாது.

 

இதற்கான பண்டு இல்லை என்று அலட்சியமாக சொல்லிவிட்டு பொதுமக்களிடம் நீங்கள் எந்தப் பத்திரிக்கை டிவி எதில் வேண்டுமென்றாலும் சொல்லிப் பாருங்கள் என்று ஆவேசத்துடன் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனவே பொதுமக்கள் நமது குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் திருப்பூர் மாவட்ட நிருபர் m. ராஜா விடம் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற நமது நிருபர் புலனாய்வு விசாரணையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும் சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்,என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

எனவே நமது நிருபர் வாட்டர் போர்டு அதிகாரி.AW வெங்கடாச்சலம் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் குடிநீர் குழாய் உடைப்பவர் பற்றி தகவலை கேட்டார். அப்பொழுதுAW வெங்கடாசலம் அதற்கு அலட்சியமாக இரண்டு நாள் மூன்று நாள் சரி செய்து விடுவோம் என்றுபதிலைக் கூறினார். மழைநீரை சேகரிக்க சொல்லும் அரசு குடிநீரை வீணாக்கி அலட்சியம் காட்டும் அதிகாரிகளை அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.!


Leave a Reply