நெல் ஜெயராமன் குறித்து 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாடம் வெளியிட்டதற்காக அவரது குடும்பம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றிகளை தெரிவித்தனர்.150 க்கும்மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டுபிடித்து உற்பத்தி செய்தவர் நெல் ஜெயராமன்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த நிலையில் நெல் ஜெயராமனின் சேவையை பாராட்டும் விதமாக 12 ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் அவரை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயராமன் குடும்பத்தினர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.