சென்னை மாமல்லபுரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுந்த இளம் பெண்ணை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணம் செய்த இளம் பெண் மாமல்லபுரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக இறங்கியுள்ளார் . அவர் கடையிலிருந்து திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டதையடுத்து அவசரமாக ஓடி வந்து
ஏற முயன்ற போது தடுமாறி விழுந்தார்.
அதனை கவனித்த ரயில்வே பாதுகாப்பு காவலர் ஜம்புலிங்கம் நொடியும் தாமதிக்காமல் அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றினார் . அந்த இளம் பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு செல்போன் மூலம் அவரது தோழிக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.