மாமியாரை கொடுமைப் படுத்தும் மருமகள்… கண்மூடித்தனமாக அடித்து உதைக்கும் வைரல் வீடியோ…

ஹரியானாவில் வயதான மாமியாரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகேந்த்ரவர் என்ற இடத்தில் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

எல்லை பாதுகாப்பு படையினரின் மனைவி 80 வயதான மூதாட்டியை அவரது மருமகள் அடித்து உதைக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.அருகிலுள்ள வீட்டிலிருந்து ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சர்ச்சையானதை அடுத்து அவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கபட்டுள்ளது.

 

இச்சம்பவத்திற்கு பெரும் கண்டனம் தெரிவித்துள்ள ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நாகரீக சமூகத்தில் இது போன்ற செயல்களை சகித்துகொள்ளமுடியாது என தெரிவித்துள்ளார். காயமடைந்த மூதாட்டி கணவரின் இறப்பிற்கு பின் அரசின் ஓய்வு ஊதியத்தை பெற்று சாப்பிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply