இந்திய ராணுவ அகாடமியில் ஒரே நேரத்தில் பட்டம் பெற்ற இரட்டையர்கள்!

இந்திய ராணுவ அகாடமி வரலாற்றில் உலகிலேயே முதன் முறையாக ஒரே மாதிரி உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை சகோதரர்கள் ஒரே நேரத்தில் தங்களது பட்டங்களை பெற்று இருக்கிறார்கள். அபினவ் பதாக் மற்றும் பரினவ் பதாக் ஆகிய இருவரும் அமிர்தசரஸில் ஒன்றாக தங்களது பள்ளி படிப்புகளை முடித்துள்ளனர்.

 

பின்னர் பொறியியல் கல்வியை தனித்தனி கல்லூரிகளில் படித்த அவர்கள் ராணுவ படிப்பிற்காக மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.அந்த வகையில் டெகராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இணைந்த அவர்கள் தற்போது ஒரே நேரத்தில் தங்களது பட்டங்களை பெற்று இருக்கிறார்கள்.

 

இந்திய ராணுவ அகாடெமி வரலாற்றில் ஒரே மாதிரி உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை சகோதரர்கள் ஒரே நேரத்தில் தங்களது பட்டங்களை பெறுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.


Leave a Reply