கூடங்குளம் அணுஉலைக் கழிவு மையம் அமைக்கும் முடிவிற்கு ஸ்டாலின் கண்டனம்!

கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே அணுஉலைக் கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அணு கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதிகளை ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்திட வேண்டும்  என்பது உச்சநீதிமன்றம் விதித்த மிக முக்கியமான நிபந்தனை என குறிப்பிட்டுள்ளார்.

 

2022 ஆம் ஆண்டுக்குள் அணுக்கழிவு மையம் கட்டிமுடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ராதபுரத்தில் பொதுமக்கள் கருத்துகேட்கும் கூட்டம் நடைபெறும் என மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது, பேரதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக அரசின் கீழ் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரியமே அதிமுக அரசின் அலட்சியத்தின் மொத்த உருவமாக காட்சியளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

கூடங்குளம் அணு உலைவளாகத்திற்குள்ளேயே அணுஉலைக்கழிவுகள் வைப்பதற்கான வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை சோதனைகக்கூட பொருட்களாக ஆக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்ச்சிகின்றன என்ற சந்தேகமே எழுவதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply