கோவையில் ஆசிரியர் தகுதித்தேர்வை 86.76 சதவிகிதம் பேர் எழுதியுள்ளனர்!

கோவையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வினை 86.76 சதவிகிதம் பேர் எழுதினர். தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் நடைபெறும் இத்தேர்வானது 32 மையங்களில் 18,116 பேர் எழுதுகின்றனர்.

 

முதல் நாளான இன்று இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 16 மையங்களில் 6,053 பேர் எழுத விண்ணப்பத்திருந்த நிலையில் 5252 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். அதாவது 86.76 சதவீதம் பேர் கோவை மாவட்டத்தில தேர்வு எழுதியுள்ளனர். இதேபோன்று நாளை நடைபெற உள்ள இரண்டாம் தாள் தேர்வில் 12,113 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

 

இந்த நிலையில் தேர்வு நடைபெறும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராசாமணி இத்தேர்விற்காக 32 மையங்களில் 32 முதன்மை கண்காணிப்பாளர்கள், 32 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 650 அறை கண்காணிப்பாளர்கள், 200 சோதனையிடுவோர் நியமிக்கப்பட்டு தேர்வுகள் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.


Leave a Reply