நெல்லையில் பேப்பர் குடோனில் தீ விபத்து!

தற்போது நெல்லை அருகே உள்ள ராமையன் பட்டியிலுள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, சுமார் 20 நிமிடங்களாக தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. விஜயராஜா என்பவருக்கு சொந்தாமான குடோன் எரிந்தது. தற்போது பாளையங்கோட்டையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

தீ விபத்து நடந்தது பற்றி ஒரு புறம் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் ,மறுபக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி கொண்டிருக்கின்றனர். ஒரு 50 சதவீதம் தீயணைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

இந்த பகுதியை பொருத்த வரையில் கிராமத்திற்க்கு ஒதுக்குபுறமாகவே குடோன் அமைந்துள்ளது. இதில் மக்கள் யாரும் உள்ளே இல்லை என உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. அதில் பழைய பேப்பர் மற்றும் அட்டை பெட்டிகள் மட்டுமே வைக்கபட்டிருந்தது. தொழிலாளர்கள் யாரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மிகப்பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது.


Leave a Reply