பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யபட்டு இருக்கிறார்கள். வங்கியின் மேலாளர் மாரிஷ் கண்ணன், காசாளர் ரங்கசாமி, ஊழியர்கள் கோபிகண்ணன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யபட்டு இருக்கிறார்கள். ரூ.4.84 கோடி மதிப்புள்ள 13.75 கிலோ தங்க நகைகள் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கொள்ளைபோயின.

 

இது தொடர்பாக புதுக்கோட்டை பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மேலாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனர். கொள்ளையின் போது பணியிலிருந்த இந்த நான்கு பேரையும் சுஸ்பண்ட் செய்து வங்கியின் திருச்சி மண்டல அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி நகை கொள்ளை போன நேரத்தில் வங்கி அலுவலர் மாரிமுத்தும் மாயமானார்.

 

அவர் மாயமான பின்பு வங்கியிலிருந்த 13.75 கிலோ தங்கம் நகைகள் மாயமாகி இருப்பதாக வங்கி மேலாளர் மாரிஷ் கண்ணன் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் 4ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இதனிடையே மாயமான வங்கி ஊழியர் மாரிமுத்துவின் சடலம் கடந்த மாதம் 3 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரையில் மீட்கப்பட்டது.மாரிமுத்துவின் மர்ம மரணமும், வங்கியில் காணாமல் போன நகைக்கும் தொடர்பு இருப்பதாக வங்கி மேலாளர் மாரிஷ் கண்ணன் புகார் அளித்திருந்தார்.

 

எனவே தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்துவிற்கு தொடர்பு இருக்காது என்றும், இதில் வங்கி அலுவலகத்திற்க்கு தொடர்பு உள்ளது என்றும் மாரிமுத்துவின் மனைவி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார்.இந்த நிலையில் வங்கி மேலாளர் மாரிஷ்கண்ணன், காசாளர் ரங்கசாமி, ஊழியர்கள் கோபிகண்ணன் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

காவல் துறையில் வங்கி தரப்பிலும், மாரிமுத்துவின் மனைவியின் தரப்பிலும் புகார் அளிக்கபட்டிருக்கிறது. மாரிமுத்து கடந்த 3ஆம் தேதி இறந்த நிலையில் அந்த வங்கியில் நடந்த கொள்ளைக்கும் மாரிமுத்துவிற்கும் சம்பந்தம் இல்லை என்று முடிவாகிறது. இந்த நிலையில் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டு இருக்கிறார்கள்.


Leave a Reply