நாமக்கலில் ஏ‌.டி‌.எம் இல் 1 லட்சம் மதிப்பிலான பேட்டரி திருட்டு

Publish by: --- Photo :


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டபகலில் ஏ.டி.எம். லிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை மர்ம நபர் திருடி செல்லும் சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கிவரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிள‌எம் மையத்திற்கு டெம்போ ஒன்றுடன் வந்த கொள்ளையன் அதன் ஓட்டுனர் மூலம் அங்கிருந்த 16 பேட்டிரிகளை வண்டியில் ஏற்றி எடுத்து சென்றுள்ளான்.

 

இயல்பாக வங்கி ஊழியர்கள் பேட்டரிகளை எடுப்பது போல் எடுத்து சென்றதால் அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த கொள்ளை குறித்து வங்கி நிர்வாகத்திற்கு தாமதமாகவே தெரிய வந்ததையடுத்து இது குறித்து புகார் அளிக்கபட்டது. அதன் பேரில் அந்த பகுதியில் பொருத்தபட்ட சி‌சி‌டி‌வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.